சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமியை அதே கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து 15 வயது சிறுமிக்கு பட்டிஸ்வரன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.