Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற செயலாளர்…. இறைக்கு காத்திருந்த முதலை…. கடலூரில் பரபரப்பு….!!

ஆற்றில் குளிக்க சென்ற செயலாளரை முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய நல்லூர் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற அவரை அங்கிருந்த முதலை தண்ணீரில் வைத்து கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் முதலை மீது கல் வீசி அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் முதலை அவரை தண்ணீருக்குள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் இணைந்து படகு மூலமாக கோபாலகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து முதலை கடித்ததில் பாலத்தின் அடியில் கோபாலகிருஷ்ணன் சடலமாக கிடந்துள்ளார். அதற்கு பிறகு சடலத்தின் அருகில் இருந்த முதலையை தீயணைப்பு வீரர்கள் விரட்டி கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |