ஸ்மார்ட் போன் செயலி வேலை செய்யாததால் பயன்பாட்டாளர்கள் அதனுடைய நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர்.
மனிதனின் தேவைகள் நவீன நாகரீகத்திற்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதிலும் ஸ்மார்ட்போன் வந்த பிறகு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். நாம் உபயோகிக்கும் செயலிகளில் அதிக அளவு ஸ்னாப் சாட் எனும் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியானது புகைப்படங்களை எடுத்து அதில் கிராப்பிங் மற்றும் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்து பிறருக்கு அனுப்பும். இந்த நிலையில் 1,25000 பேர் தங்களுக்கு ஸ்னாப் சாட் செயலி வேலை செய்யவில்லை என ட்விட்டரில் அந்த செயலினுடைய நிறுவனத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த நிறுவனம் ஸ்னாப் சாட் செயலி குறித்து ஆராய்ந்துள்ளது. அதன் பின் அதிக அளவு பயன்பாட்டாளர்கள் இருப்பதால் செயலியானது ஹாங்க் ஆகியுள்ளது. மேலும் லாகின் மற்றும் ஹாங்கிங் பிரச்சனையை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. எனவே செயலியை இயக்குங்கள் ஒருவேளை செயலி வேலை செய்யவில்லை எனில் மீண்டும் பதிவேற்றுங்கள் என நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒரு மணி நேரம் கழித்து செயலி பழைய நிலைக்கு திரும்பி விட்டதாக புகார் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.