Categories
உலக செய்திகள்

செயலிழந்த வைரஸில்…. தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்…. ஆய்வு நடத்திய ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள்….!!

செயலிழந்த வைரஸை கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அதிக நன்மையை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செயலிழக்கப்பட்ட வைரஸை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியானது ஆபத்தை தரும் என்பதை விட அதிக நன்மையையும் தருவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘கொரோனா வேக்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் முகவாதத்தினால் மிகக் குறைந்த அளவிலே பாதிக்கப்படுகின்றனர். இதனை பேராசிரியர் லான் சி கெய்வாங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதில் ” இந்த வகை தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் போது முக பக்கவாதம் ஏற்படும். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் இது ஒரு தற்காலிகமான நிகழ்வாகும். தற்பொழுது வரை நடத்திய ஆய்வுகளில் வெளிவந்த தரவுகளை வைத்துப் பார்க்கும் போது செயலிழந்த வைரஸினால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தினால் ஆபத்தை விட நன்மை  அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியினை லான்சென்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |