ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவுள்ளார்.
அவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான கதை விவாதத்தை சக இயக்குனர்களுடன் அட்லீ பகிரும் வீடியோ காட்சி சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷாருக்கான் தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனால் ஷாருக்கான் வைத்த அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.