ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் குறித்த சில சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக வலம் வரும் அட்லீ தளபதி விஜயை வைத்து மூன்று இடம் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு LION என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஷாருக்கான் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதாவது ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொருவர் கிரிமினலாக நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.