ஷாருக்கான் தனது ஆதர்ச நடிகர்களான ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோருடன் வெளியிட்டுள்ளப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான், தனக்கு மிகவும் பிடித்த தனது ஆதர்ச ஹீரோக்கள் ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோரை சந்தித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
சவுதி அரேபியா, ரியாத்தில் நடந்துவரும் ஜாய் ஃபாரம் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான், தனக்கு மிகவும் பிடித்த இந்த இரு நடிகர்களையும் சந்தித்துள்ளார். ஜாய்ஃபாரம் 19இல் என்னுடைய ஹீரோக்களான இவர்களை சந்தித்தது மகிழ்ச்சி எனக்கூறி இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில், கேம் ஆஃப் த்ரோன்ஸ், அக்வா மேன் புகழ் ஜேசன் மோமாவுடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
Khan, Damme, Chan at the #JoyForum19. The joys all mine as I got to meet my heroes. @JCVD @EyeOfJackieChan @JoyForumKSA pic.twitter.com/bwvmmJa2wy
— Shah Rukh Khan (@iamsrk) October 13, 2019