காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது.
முகலாயர் ஆட்சியில் அரண்மனையில் வருடத்துக்கு ஒருமுறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி அங்கு பல பொருட்களை விற்பனை செய்வார்கள் அங்குதான் ஷாஜகான் மும்தாஜ் காதல் தொடங்கியது சந்தையை பார்க்க வந்த சாஜகான் அங்கு இருந்த அழகான பெண் ஒருவரை பார்த்தார் பார்த்த உடனே அவளுடைய அழகில் மயங்கி விட்டார் அந்த அழகிய பெண்ணுடைய பெயர் அர்ஜுமான் பானு பேகம். அவளுடைய அழகில் மயங்கிப்போன ஷாஜகான் அவருடைய தந்தை சம்மதத்தின் படி திருமணம் செய்து கொள்கிறார் .
திருமணத்திற்கு பிறகு அவள் மும்தாஜ் என அழைக்கப்படுகிறாள் தன்னுடைய மனைவி மும்தாஜ் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் ஷாஜகான் உடலாகவும் உயிராகவும் இரண்டு பேரும் இணைந்திருந்தார்கள் இரண்டு பேரும் நண்பர்களாகவும் பழகினார்கள் அரசு ரகசியங்களையும் தினமும் தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்கிறார் அதேபோல் ஷாஜஹான் எங்கு சென்றாலும் மும்தாஜ் அழைத்துச் செல்வார் ஷாஜகானை பிரிந்து மும்தாஜ் ஒரு நாளும் இருந்தது கிடையாது
இப்படி அன்பும் பாசமும் நேசமும் கொண்ட இப்படிப்பட்ட நல்ல தம்பதிகளுக்கு வாழ்நாளில் கிடைத்த பரிசு 14 பிள்ளைகள் இதில் 7 குழந்தைகள் இறந்துவிட்டன 1631 ஆம் வருடத்தில் ஜூன் ஏழாம் தேதி சுல்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அந்த நாட்டோட எல்லைப் பகுதியில் தன்னுடைய படைகளோடு முகாமிட்டிருந்தார் ஷாஜகான் அப்பொழுது அவரோடு சென்றிருந்த மும்தாஜ் தன்னுடைய 14வது குழந்தையை பெற்றெடுத்தார் குழந்தை பிறந்து கொஞ்ச நேரத்தில் மும்தாஜ் உடம்பு திடீரென வலிப்பாள் துடித்தார் . இதை பார்த்த காவலாளிகள் ஷாஜஹானிடம் கூறினார்கள் ஷாஜகான் ஓடிவந்து மும்தாஜை தன்னுடைய மடியில் வைத்தார் அடுத்த கணமே மும்தாஜின் உயிர் பிரிந்தது.
ஷாஜகான் தன் மனைவி பிரிந்த மன சோகத்தில் கதறி கதறி அழுதார் அவர் அதிலிருந்து வெளியே வர இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது அவர் ஆடை அலங்காரங்களை விரும்பாமல் முற்றிலுமாக எளிமையாக இருந்து வந்தார் அவருடைய எண்ணங்கள் முற்றிலும் மும்தாஜ் நினைத்துக் கொண்டிருந்தது ஒரு நாள் நெருங்கிய சினேகிதி ரோடு பேசிக்கொண்டிருந்தபோது மும்தாஜ் பற்றிப் பேசினார் மனைவியுடன் நினைவாக மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட ஷாஜகான் அவளுக்காக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று கூறினார் அந்த எண்ணம் மிகவும் வலுவடைந்தது மும்தாஜ் இறந்த ஒரு வருடத்தில் தாஜ்மஹால் கட்டும் பணி தொடங்கியது .
பல கட்டிடக் கலை வல்லுநர்கள் அவர்களுடைய 20 வருடம் உழைப்பினால் தாஜ்மஹால் என்னும் ஒரு கட்டிடம் அழகாக கிடைத்தது பாரசீகம் ரஷ்யா என்று நாடுகளிலெல்லாம் வைரம் வைடூரியம் முத்து பவளம் விலைமதிப்பற்ற செல்வங்கள் வாங்கிட்டு வந்து தாஜ்மஹால் கட்டப்பட்டது. ஆனால் ,ஆங்கில அவர்களுடைய ஆக்கிரமிப்புக் காலத்தில் அந்த எல்லா செல்வங்களையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள் ஒரு கணவன் தன் மனைவிக்கு கட்டிய கல்லறை தான் இந்த உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் முன் இருந்த காலத்தில் தாஜ்மஹால் உள்ளே முஸ்லீம்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது .
தாஜ்மஹாலை கண்டு ஆங்கிலேயர்கள் இதை இடிக்க திட்டமிட்டார்கள் ஷாஜகானின் மகன் பதவிக்கு ஆசைப்பட்டு தன் தந்தை எனப் பார்க்காமல் சிறையில் அடைத்து விட்டார் ஷாஜகான் சிறையில் தன் மனைவியின் நினைவாகவே இருந்தார் எல்லாவிதமான வசதியும் அவருக்கு இருந்தது இவருடைய சிறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டும் வைக்கப்பட்டது அதன் வழியாக தன் மனைவியின் கல்லறையை அவர் பார்த்துக் கொண்டிருந்தார் அதிலேயே தன்னுடைய வாழ்க்கையை கழித்தார் ஷாஜகான் தன்னுடைய 77 வயதில் இந்த உலகத்தை விட்டு சென்றான் மும்தாஜை புதைத்த இடத்தில் ஷாஜகானை புதைத்தார்கள்.