Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… தமிழ் சினிமா துணை ஒளிப்பதிவாளர் திடீர் தற்கொலை…… அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

சென்னை மந்தனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படத்துறை உதவி ஒளிப்பதிவாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாங்காடு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் மிகுந்த மன உளைச்சல் காரணமாக விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

Categories

Tech |