Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோணிக்காக பரிசுடன் காத்திருக்கும் அவரது மனைவி சாக்க்ஷி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்காக  அவரது மனைவி சாக்க்ஷி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்கு எப்போதும் வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது. பைக்குகள்,கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்துள்ள தோணி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். தோணியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15-ம் தேதி  முடிவடையும் நிலையில் அவரது மனைவி சாக்க்ஷி தோணிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார்.

அந்த காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த புதிய வாகணம் வீடு வந்து சேர்ந்து விட்டது.இந்தக் கார் இந்தியக் குடிமகன் என்ற அடையாளத்திற்காக காத்திருக்கிறது. ஏனென்றால் அந்த காரை வைத்திருக்கும் முதல் இந்தியர் நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |