Categories
உலக செய்திகள்

“நிலாவில் வீடு செய்வோமா?” நிஜமாவே செஞ்சிட்டாரு…. மனைவிக்கு திருமண பரிசாக…. ஆச்சர்ய சம்பவம்…!!

கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பத்திரத்தை கொடுத்துள்ளார். அதை பார்த்து அவருடைய மனைவி மிகுந்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.

நிலாவில் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள லூனார் சொசைட்டி என்ற நிறுவனத்தில் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எவ்வளவு விலைக்கு இந்த நிலத்தை வாங்கினார் என்பது செய்தியாளர்களிடம் தர்மேந்திரா தெரிவிக்கவில்லை. இருப்பினும் இது உயர்ந்த பரிசு என்றும், தன்னுடைய மனைவிக்கு இது பொருத்தமான பரிசு என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |