செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என சொல்றதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? தமிழ்நாட்டினுடைய அரசியலுக்கு சாபக்கேடு நீங்க. ஈஸ்ட் இந்தியா கம்பெனியோடு கொஞ்சு குலாவி உங்களுடைய மூதாதையர்கள் ஈஸ்ட் இந்தியா கம்பெனியோடு கொஞ்சி குலாவலையா?
உங்களுடைய மூதாதையர் கட்சி என்று சொல்லக்கூடிய ஜஸ்டிஸ் பாட்டிக்கும், ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையா? 1941-ல நீங்க சுதந்திரத்தை பற்றி என்ன பேசினீங்க? சுதந்திரம் வேண்டாம் என்று பேசவில்லையா ?
அந்த கட்சியின் உடைய வழி தோன்றலாக வந்து அமர்ந்து விட்டு, என்னை பார்த்து அந்த வார்த்தை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? அதுவும் தி.மு.க.-வில் யாருக்குமே அந்த அருகதை கிடையாது.உங்களுக்கும் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு தமிழக மக்களுக்கே தெரியும்.
ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிச்சதிலிருந்து திராவிட கழகத்திலிருந்து ஈஸ்ட் இந்திய கம்பெனி கூட எந்த ஒரு தொடர்பும் நீங்க வச்சுக்கலையா? என அப்போது பிரிட்டிஷ்ஷாக மாறி இருக்கலாம். ஐயோ தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்துறாதீங்க. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்திறாதீங்க. எங்களால் ஒரு குண்டூசி கூட செய்ய முடியாது.
அப்படியும் சுதந்திரம் கொடுத்தீங்கன்னா, இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டை ஆளுங்க அப்படின்னு உங்க தலைவர்கள் சொல்லவில்லையா? வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் பழைய சரித்திரத்தை மறைத்து விட்டு, ஏதோ இவர்கள் இந்தியாவிற்கு போராடியவர்கள் போல் 2022- இல் காட்டும்போது பதிலடி கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமை என தெரிவித்தார்.