Categories
உலக செய்திகள்

“பிரிட்டனுக்குள் வர தடை”… முகத்தை மறைத்து வாழ்ந்த ஷமீமாவின் மற்றொரு முகம்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஷமீமா பேகம் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஷமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனக்கு 15 வயது இருக்கும் போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனில் இருந்து சிரியாவிற்கு ஓடினார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஷமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவத்தொடங்கியது. அதனால் பிரிட்டன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையைப் பறித்தது. தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டுமென்று எண்ணிய ஷமீமா தன்னை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷமீமா நேர்மையாக முறையீடு செய்ய வேண்டும் என்பதால் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஷமீமாவை  நாட்டிற்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்பு பாதிப்படையும் என்றும் பொதுமக்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும்  உள்துறை அமைச்சகம் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இந்த வழக்கை கடந்த வெள்ளி கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஷமீமாவை பிரிட்டனுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் குர்திஸ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்ட ஷமீமா கோபமுற்று மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுது அழுதார் என்று  கூறினார் .

ஆனால் இவ்வளவு நாள் பர்தா அணிந்து கொண்டு தன் முகத்தை கூட  வெளி உலகத்திற்கு காட்டாமல் இருந்து வந்த ஷமீமா பற்றிய வீடியோ ஒன்று  தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஷமீமா  வெஸ்டர்ன் உடை அணிந்து கொண்டு, கண்களில் கண்ணாடி போட்டு கொண்டு கோபமாக நடந்து செல்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேட்க முயன்றபோது ஷமீமா பதிலளிக்க மறுத்துள்ளார்.

Categories

Tech |