Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் கூட்டணி சேரும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

பிரபல இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை பேசூஜி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது தெலுங்கு படத்தில் இசை அமைப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறியுள்ளார். இதனால் தெலுங்கில் தயாராகி வரும் சங்கர் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கப் போகிறார் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |