ஷேர் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் முத்துராமன் உட்பட 7 பேர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனபள்ளி நோக்கி புறப்பட்டுள்ளனர். அப்போது தமிழக எல்லையான அரியனப்பள்ளி பகுதியில் வைத்து முத்துராமனின் ஷேர் ஆட்டோவும், கோவிந்தன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம்டைந்த 8 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.