ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொசவன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக சென்ற கார் ஷேர் ஆட்டோவில் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஷேர் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது.
இதனை அடுத்து ஷேர் ஆட்டோவில் பயணித்து படுகாயமடைந்த சுப்பிரமணி உள்பட 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.