சென்னை மெட்ரோ சேவை குறைவான பயணிகளை கொண்டு இயங்கி வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் தோறும் ஜனவரி மாதம் கணக்கில் கொண்டு சென்னை மெட்ரோ நிலையமானது பயணிகளின் பயணம் குறித்த அறிவிப்பை அறிக்கையாக வெளியிடும். அதன்படி தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ சேவை கடந்த 2018 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பயணிகளை பெற்றுவந்த சென்னை மெட்ரோ,
தற்போது குறைவான பயணிகளே கொண்டுள்ளது. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 43 ஆயிரம் பேர் ஷேர் ஆட்டோ, டாக்சி பேருந்து உள்ளிட்டவற்றை பயணத்திற்கு பயன்படுத்தி வந்ததாகவும், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோ வேன்களை பயணத்திற்கு பயன்படுத்திய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத படி 87 ஆயிரத்து 710 பேர் ஷேர் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட சேவைகளை பயணத்திற்காக பயன்படுத்தியதில், சென்னை மெட்ரோ விற்கு பயணிகளின் வருகை குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.