Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஷேர் மார்க்கெட்” ரூ1,00,000க்கு…. ரூ10,000 லாபம்…. ஆசை வார்த்தை…. ரூ14,50,000 மோசடி….. கணவன்-மனைவி கைது….!!

திருவண்ணாமலை  அருகே ஷேர் மார்க்கெட் மூலம்  லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி  செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.  எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் அவரது கணவர்  பவுன்குமாரும் சென்று, நான் முதலீடு செய்யும் ஷேர் மார்க்கெட்டில் நீங்களும் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருகிறேன் என்று அவர் கூறவே,

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ரூபாய் ஒரு லட்சத்தை மணிமேகலையும் அவரது கணவரும் ஜெயந்தியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து லாபமாக ரூபாய் 10,000 கூடுதலாக கிடைக்கப் பெற்றதாக கூறி அவர்கள் இருவரது வங்கி கணக்கிற்கு ரூபாய் 1,10,000 ஜெயந்தி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நிறைய பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறவே  ஜெயந்தி அவரது கணவர் இருவரும் சேர்ந்து ரூபாய் மூன்று லட்சமும் ஜெயந்தியின் தாயார் மீனா அவர்களிடமிருந்து ரூபாய் மூன்று லட்சமும், பின் அவர்களது மைத்துனர்கள், உறவினர்கள் என ஆங்காங்கே பணத்தை சேகரித்து சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஜெயந்தியிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பணத்தை பெற்றபின் லாபத்தையும் அசலையும் தராமல் ஜெயந்தியும் அவரது கணவரும் காலதாமதம் செய்து வந்துள்ளனர். அவர்களிடம் சென்று கேட்டபோதும் உரிய பதில் அளிக்காததால் மணிமேகலை திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இதையடுத்து   ஜெயந்தி மற்றும் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொள்கையில், அவர்கள் இருவரும் பண மோசடி செய்தது தெரியவந்தையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |