Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் பகுதிக்கு 6 நபர்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவேகமாக சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ இரும்புலியூர் சிக்னலில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் அதனைத் திருப்பியுள்ளார். அப்போது திடீரென  கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டார். ஆனால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த மற்ற 3 பேரை அருகிலுள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் அச்சக உரிமையாளரான நாகமுத்து, பாதிரியாரான ஐசக்ராஜ் மற்றும் தனியார் கம்பெனி ஊழியரான சுந்தர்ராஜ்  என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் பலியான நாகமுத்துவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுனரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |