Categories
உலக செய்திகள்

“சுறாக்களுக்கு ஏற்படும் மர்ம நோய்!”.. தலையில் ஏற்படும் புண்கள்.. விஞ்ஞானிகள் கூறும் காரணம்..!!

மலேசியாவில் இருக்கும் ரீஃப் வகை சுறாக்கள் ஒரு வகையான தோல் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபாடன் கடற்பகுதியில் வாழக்கூடிய ரீஃப் வகை சுறாக்களை நீச்சல் வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சுறாக்களின் தலை பகுதியில் புண்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. எனினும் சிபாடன் கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுறாக்களின் இந்த பாதிப்பிற்கு மனிதர்கள் காரணமில்லை.

எனினும் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கடந்த மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்திருக்கிறது. எனவே தான் சுறாக்களுக்கு இவ்வாறு புண்கள் ஏற்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கு முன்பு கடந்த 1985 ஆம் வருடத்தில் அதிகமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை விட இந்த வருடம் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |