பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 7 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸில் யார் ஜெயிப்பார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பிரியங்கா விக்ரமன் டைட்டிலை ஜெயிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமன் சிறப்பாக விளையாடி வருவதாகவும், தன்னுடைய பங்களிப்பை சிறப்பான முறையில் அளிப்பதாகவும் ப்ரியங்கா கூறியுள்ளார். மேலும் இதனால் தான் விக்ரமன் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பிரியங்கா கூறியுள்ளார்.