Categories
உலக செய்திகள்

கொரோனாவை கொண்டு வந்திருக்கும் ஆசிய நாய்… எச்சியை துப்பி இனவெறி தாக்குதல்… பெண் செய்த கேவலான செயல்!

ஆஸ்திரேலியாவில் ஆசிய சகோதரிகள் இருவர் மீது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆசிய பெண்ணான 23 வயதான சோபி டூ மற்றும் அவர் சகோதரி 19 வயதான ரோசா டூ ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உள்ளூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகில் வந்தார். பின்னர் அவர் ரோசாவை கால்வாய் எட்டி மிதிக்க முயன்றார்.

இதையடுத்து இருவரையும் பார்த்து ஆசிய நாய்கள் தான் கொரோனா வைரஸை இங்கு கொண்டு வந்துவிட்டார்கள் என கத்தி கூறினார். அதுமட்டுமில்லாமல்  அந்த பெண் ரோசா முகத்தில் எச்சில் துப்பினார்.  மேலும் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களிடம் எல்லாம் அந்த இரு பெண்கள் அருகில் போகாதீர்கள் அவர்களுக்கு கொரோனா இருக்கிறது என கூறினார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது தற்போது வைரலானது.

Top cop vows to find foul-mouthed youth who SPAT in a young ...

இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  பின்னர் உலக அளவில் ஆசியர்கள் மீது இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது. எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது என கூறினர்.

இதற்கிடையே இனவெறித் தாக்குதல் நடத்திய அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |