மனைவி மீது சந்தேகப்பட்டு நடுரோட்டில் வைத்து கதற கதற கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், ஜாம்நகர் என்ற பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நீதா. இந்தப் பெண்ணின் கணவர் பிரபுல். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவரது கணவர், பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபருடன் மனைவி கள்ள உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு நிதாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இவரின் கொடுமை தாங்க முடியாமல், அவரின் மனைவி அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பிரபுல் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டு மனைவி பணிபுரியும் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் இல்லை என்பதால் அவரின் வீட்டிற்கு செல்வதற்கு தயாரானார். அப்போது பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருப்பதை கண்ட பிரபுல் அவருடன் சென்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
அப்பெண்ணுடன் நின்றிருந்த சிலரும் அவரை தடுக்க முற்பட்டபோது, அவரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணவர் பிரபுலை கைது செய்தனர்.