திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல இடங்களில் நேரடியாகவே போய் சென்று, தகராறு நடைபெறுகின்ற இடங்களில் நின்று, அதிகாரிகளுடன் சென்று மீட்டு இருக்கிறார். அப்படி மீட்கப்பட்ட இடங்களில, சாதாரண மக்கள் குடியிருக்கும் இடங்கள் எதையும் காலி செய்யவில்லை. அதையும் சொல்லிக்கொள்கிறேன், அதிலும் பிரச்சனை இருக்கு.
ஏராளமான ஏழை – எளிய மக்கள், கோயில் நிலங்களில் குடியிருக்கிறார்கள். அவங்களை வெளியேற்ற வில்லை, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அபகரித்தவர்கள் அல்லது வேறு செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்த நிலங்கள், இவைகள் தான் மீட்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஒருவர்.
ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வைத்திருந்தார். புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு, அந்த நிலம் மீட்கப்பட்டது. அமைச்சராக வந்தவுடனே… அது அண்ணா திமுக காரர் அப்படிங்கறதுக்காக இல்ல. தவறான முறையில் நிலம் பயன்படுத்தப்படுகிறது என்கிற முறையில் இந்த சாதனை எல்லாம் நம்முடைய அமைச்சர் அவர்கள் மேற்கொண்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பக்தர்கள் வரவேற்கிறார்கள், உண்மையான பக்தர்கள் வரவேற்கிறார்கள். வேறு சிலர் புறம் பேசுவார்கள், அது வேறு விஷயம் என தெரிவித்தார்.