நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன், இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ? என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள், நம்பினோம்.
ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் நாய்க்கு போட்ட எலும்பு துண்டு போல, நமக்கு போடுகிறான் என்று ஏன் மான உணர்வும், இன உணர்வும் கொண்ட, தன்மானமிக்க தமிழர்களுக்கு அந்த உணர்வு வரவில்லை. ஒரு நாய்க்கு, ஒரு பூனைக்கு இருக்கின்ற அறிவு கூட நமக்கு இல்லாத ஏன் ? பிறகு தெருவில் நின்று புலம்பி, எங்களுக்கு நிவாரணம் தரவில்லை…. அந்த தெருவில் கொடுத்தார்கள், இந்த தெருவில் கொடுக்கவில்லை என போராடுவது வேஸ்ட. உங்களுக்கு தெரியுமா ?
தமிழக நிலத்தில் நாம் வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள் வீதியில் நின்று போராடினார்கள். எவ்வளவு புரட்சிகரமான போராட்டம் ? என்பது கற்றறிந்த இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அம்மாவிடம் கேட்டேன். என்னமா ஓட்டுக்கு 500 ரூபாய். அதை வச்சு என்ன செஞ்ச ? அஞ்சு நாள் சாப்பிட்டோம். பிறகு ஐந்து வருடம் பட்டினியா கிடைப்பியே அம்மா. அதை ஏன் யோசிக்கவில்லை ? என்றால், தலையை சொரியுது. கற்றுக் கொடுக்க எவருமில்லை. கற்றவர்கள் விலகி நின்றதால்… மற்றவர்கள் நிற்பதால்.. நல்லவர்கள் விலகி இருப்பதால் கயவர்கள் நிறைத்து விடுகிறார்கள் என விமர்சித்தார்.