நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சில்பா செட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய சமூக ஊடக தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி ரூ.25 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருபோதும் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CSEB7z0jiYZ/?utm_medium=share_sheet
அதோடு மட்டுமில்லாமல் ஊடகங்கள் மற்றும் நலன்விரும்பிகளால் எங்கள் மீது நிறைய வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அரைகுறையான தகவல்களை வெளியிடாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு சட்டபூர்வமான இந்திய குடிமகனாகவும் கடின உழைப்பாளியாகவும் நான் கடந்த 29 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறேன் சட்டத்தின் போக்கில் அனைத்தும் செல்லட்டும் சத்யமேவ ஜெயதே! என்று ஷில்பா ஷெட்டி குந்த்ரா அதில் தெரிவித்துள்ளார்.