லெபனான் நாட்டில் ஒரு சிறிய வகை விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லெபனான் ஏவியேஷன் கிளப்பிற்கு உரிய ஒரு சிறிய வகை விமானமானது, மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருவர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிவில் பாதுகாப்பு குழுவினர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாயமான விமானம் மற்றும் அதில் பயணம் மேற்கொண்டவர்களை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சரான, Bassam Mawlawi கூறியிருக்கிறார். எனினும், விபத்திற்கான காரணம் என்ன? என்று தற்போது வரை தெரியவில்லை.