ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று பாதியாக உடைந்து ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பனாமா கொடி உடைய, 39,910 டன் எடை கொண்ட கிரிம்சன் போலாரிஸ் என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் காலையில் துறைமுகத்தில் தரைதட்டி நின்றிருக்கிறது. அதனையடுத்து மிதந்திருக்கிறது. மேலும் வானிலை மோசமாக இருந்ததால், நீண்ட தூரம் செல்ல முடியாமல் துறைமுகத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதன் பின்பு நேற்று அதிகாலையில் அந்தக்கப்பல் பாதியாக உடைந்து, எண்ணெய் கடலில் கசிய தொடங்கியுள்ளது. கடலில் சுமார் 5.1 கிமீ நீளத்திற்கும், 1 கிமீ அகலத்திற்கு எண்ணெய் பரவியிருக்கிறது. இருப்பினும் கரைக்கு எண்ணெய் பரவாத படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
Au Japon, un navire qui s'est échoué et brisé en deux provoque une fuite de pétrole pic.twitter.com/3D98OxoPYt
— BFMTV (@BFMTV) August 13, 2021
மேலும், கப்பலில் சென்ற 21 குழுவினரையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கப்பலின் பின்பாகம் கடலுக்குள் மூழ்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.