பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதீர் கரி. இவருடைய உயிருக்கு ரவுடிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுல்தான்வின் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவிலில் விதிமுறைகளை மீறியதாக கூறி சுதீர் கரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒருவர் சுதீர் கரியை நோக்கி ஒருவர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதில் 2 குண்டுகள் அவருடைய உடம்பில் பாய்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் போலீசார் கண் முன்னே நடந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு துப்பாக்கியால் சுட்ட சந்தீப் சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அப்பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது .
Shocking – Shiv Sena leader was murdered in the presence of the #Punjab police.
This is the state of Law & order in @ArvindKejriwal ruled state. https://t.co/XLYg7O6dva
— Arun Pudur (@arunpudur) November 4, 2022