Categories
சினிமா தமிழ் சினிமா

சிவமைந்தன் கார்த்தி சிவபக்தனாக ருத்ர தாண்டவம் – நடிகை ஆர்த்தி

‘கைதி’ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அமைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் தான் நேசிப்பதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான படம் கைதி. மாநகரம் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.படம் பார்த்த அனைவருக்கும் கைதி டில்லியை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்சென்றுள்ளது.

Image

இந்தப் படத்தில் நடிகர்கள் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

karthi

இப்படத்தைப் பார்த்த நடிகை ஆர்த்தி, கைதி படத்தில் கார்த்தி பிரியாணி சாப்பிடுவதை போல் தானும் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், தமிழ் சினிமாவின் புதிய ஜானர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அமைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் நேசிக்கிறேன். சிவமைந்தன் கார்த்தி சிவபக்தனாக ருத்ர தாண்டவம். இந்த படத்துக்கு ஐந்துக்கு ஐந்து மார்க் தருவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |