Categories
சினிமா தமிழ் சினிமா

ஷிவானியிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்ட பாலா… ஆறுதல் சொல்லும் சுரேஷ் … வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்டோர் ரூம் வழியாக  ஷிவானி சென்றுள்ளார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர் . ஷிவானியின் வருகையை அறிந்த பாலா அவரைப் பார்ப்பதற்காக விரைந்து வருகிறார் . ஆனால் சிவானி கண்டு கொள்ளாததால் பாலா சோகமாக ஒதுங்கி விடுகிறார் .

இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் பாலாவை நலம் விசாரித்தார் சிவானி . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் சிவானி பாலாவிடம் முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து பேசுகிறார் . அப்போது ஷிவானி ‘நீயே என்னைப் பற்றி இப்படி பேசினால் எப்படி ?’ என்று கூற வருத்தமடைந்த பாலா கண்கலங்கி மன்னிப்பு கேட்கிறார் . இதையடுத்து சோகமாக இருந்த பாலாவிடம் ‘நீ தவறு செய்யவில்லை’ என்று ஆறுதலாக பேசுகிறார் சுரேஷ்.

Categories

Tech |