விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கிழவி வேடத்தில் இருந்த ஷிவின் டிரஸ் மாற்றுவதற்காக டிரெஸ்ஸிங் ரூம்ஸ் சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற ராபர்ட் மாஸ்டரும் அமுதவாணனும் ஷிவினை கிண்டல் செய்தனர். டிரெஸ்ஸிங் ரூமில் இந்த திரையை விலக்கி ஷிவினியையே கலாய்த்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எல்லை மீறிய அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அங்கிருந்த சக போட்டியாளர்கள் கண்டிக்காததும் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.