நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 89 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 18,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 10,860 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ஆம் அலை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.