மீனவர்களுடைய சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் குமரிமாவட்ட விசைப்படகு மீது தமிழக கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் விசைப்படகின் பதிவு மற்றும் உரிமம் உடனடியாக நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரின தொழில்நுட்ப அடையாள அட்டை ரத்து செய்யப்படும். மேலும் மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணங்கள், மாநில மற்றும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.