இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தபோதிலும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் பூனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஒமைக்ரான்பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.