Categories
மாநில செய்திகள்

SHOCK: கோவை-ஷீரடி தனியார் ரயில் சேவை…. மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் செல்கின்றனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பிரதமர் மோடியின் பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் கீழ்‌  கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக விரைவு ரயில் இயக்கபட்டுள்ளது.

இந்நிலையில் கோவையிலிருந்து சீரடிக்கு தொடங்கப்பட்டுள்ள தனியார் ரயில் சேவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பொது மக்களின் நீண்டகால நலன்களுக்கும் பொது துறைக்கும் எதிரானது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு திமுக எம்பி டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |