தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பின்னலாடைகளில் 70%-க்கும் அதிகமாக திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சென்ற சில மாதங்களாகவே பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நூல் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 முதல் 190 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பின்னலாடை தொழிலானது பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரகநூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டது தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு தொடர்ந்து நூல் விலை அதிகரிப்பால் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து வந்தது. அத்துடன் இந்த விலை உயர்வு தொடர்ந்தால் இந்திய ஆடை வர்த்தகம் அழிவை நோக்கி செல்லும் எனவும் தொழில்துறையினர் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதமும் நூல் விலை ரூபாய் 30 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ருபாய் 40 என மீண்டுமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து ரகங்களுக்கும் ரூபாய் 40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட் அசோசியேஷன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் இன்றும், நாளையும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.