விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்னத்தாய். 26 வயதுடைய அன்னத்தாய் என்பவர், 5 மாத கர்ப்பிணி பெண். அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அன்னத்தாயிற்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால், அருகிலிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் அவருடைய வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.