Categories
மாநில செய்திகள்

SHOCK: பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி…. அதிர்ச்சியடைந்த மக்கள்…. பெரும் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் பணம் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மக்களுக்கு அதிமுக அரசு கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது பொங்கல் பரிசு அறிவித்த போது, 21 வகையான உணவு பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, புளி உள்ளிட்ட 21 பொருள்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களுக்கு தரமற்ற அரிசி வழங்குவது இதுபோன்று ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பை பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.

இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் ரேஷன் கடையில்  பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்கியுள்ளார். அதில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய புளியை பிரித்துப் பார்க்கும்போது, அதில் இறந்து போன பல்லி ஒன்று இருந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயனாளி, உடனடியாக சென்று ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு ரேஷன் கடை ஊழியர் சரியாக பதில் அளிக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |