Categories
மாநில செய்திகள்

SHOCK : மாவட்டத்திற்கு இடையே மீண்டும் போக்குவரத்து ரத்து?…. புதிய பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு வெளியேயும் உள்ளேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது.

Categories

Tech |