Categories
மாநில செய்திகள்

SHOCK: ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…. அதிரவைக்கும் ரிப்போர்ட்…. இனிமே உஷாரா இருங்க….!!!!

சென்னை மாவட்டத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிபத்தில் சிக்கி நடப்பு ஆண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதில் ஹெல்மெட் அணியாமல் பயணத்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 714 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னையில் இருசக்கர வாகன சாலை விபத்தில் 611 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,294 பேர் காயமடைந்துள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்களை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |