Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 5 வருடங்களில் 28,000 விவசாயிகள் தற்கொலை…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  நடைபெற்று வரும் நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியாவில்‌ 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு 5,955 விவசாயிகளும், கடந்த 2018-ம் ஆண்டு 5,763 விவசாயிகளும், கடந்த 2019-ம் ஆண்டு 5,957 விவசாயிகளும், கடந்த 2020-ம் ஆண்டு 5,579 விவசாயிகளும், கடந்த 2021-ம் ஆண்டு 5,318 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த 5 வருடங்களில் மராட்டியம் மற்றும் கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதோடு, பட்டியலின் முதல் 2 இடங்களில் மராட்டியம் மற்றும் கர்நாடகா தான் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக பல்வேறு விதமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மத்திய அரசு விவசாயிகளின் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் பிரதமரின் கிசான் திட்டம் மற்றும் பிரதம மந்திரி பசில் பீம யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |