Categories
டெக்னாலஜி

SHOCK: 50 கோடி வாட்ஸ்அப் எண்கள் ஹேக்…. பயனர்களுக்கு வெளியான தகவல்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், 84 நாடுகளை சேர்ந்த 48.7 கோடி whatsapp பயனர்களின் தொலைபேசி எண்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றவாறு தரவு விலை ரூ.80 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரியாத எண்களின் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |