Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்ஹாசன்?…. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதன் பிறகு 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த சீசனுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டாராம். இந்த சீசனோடு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவதாக இணையதளங்களில் தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் இது தொடர்பான உண்மை தகவலை நடிகர் கமல்ஹாசன் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |