நடிகர் கமல் மருத்துவர்கள் அறிவுரைப்படி காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாகவும், உணவு கட்டுப்பாடுகள் இருந்து விலகிய காரணமாகவும் சிறிது உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் மருத்துவர்கள் அறிவுரை படி காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எனவே தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் சிகிச்சை காரணமாக தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.