தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை சிலர் ஹேக் செய்து விட்டதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார். அந்த கணக்கை தற்போது மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கார்த்தி கூறியுள்ளார். கார்த்தியின் பேஸ்புக்கை ஹேக் செய்தவர்கள் தங்கள் ஆடும் வீடியோ கேமை லைவ் ஸ்டீரீம் செய்து வருகிறார்கள். நடிகர் கார்த்தி எதற்காக வீடியோ கேம் விளையாடுகிறார் என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. மேலும் நடிகர் கார்த்தியின் facebook பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.