சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து பகொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து பெங்களூரில் தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இதையடுத்து வழி நெடுகிலும் அவருடைய தொண்டர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். மேலும் தமிழக எல்லைக்குள் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று போலீசார் நோட்டிஸ் அளித்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் ஏறி அனைவருக்கும் டுவிஸ்ட் கொடுத்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தியது. தஞ்சையில் 26540 சதுரடி அளவு கொண்ட சொத்தை கையகப்படுத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளா.ர் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.