பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள நிலையில், தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் அதிக பங்கு கேட்டதால் பல தியேட்டர்களில் ரிலீசாகவில்லை.
குறிப்பாக சென்னையிலும் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று அவதார் 2 படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் முழுவதும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அவதார் 2 திரைப்படத்தின் மொத்த காட்சியும் இணையதளத்தில் லீக்கானதால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் அஞ்சுகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.