சிறுவன் ஒருவர் தாயாரை கொன்று விட்டு போலீசாரிடம் பிணப்பை கொண்டு வர சொன்ன சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்தவர் ரோவன் தாம்சன்(17 ). பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனான இவர் தன்னுடைய தாயார் ஜோனாதன் தாம்சன் என்பவரை கொடூரமான முறையில் கொன்றதுடன் காவல்துறையினரும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகன் இருவரும் தங்களுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் அருகே காலையில் ஜாக்கிங் சென்று திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜோனாதன் கழுத்து நெரிக்கப்பட்டு சுயநினைவற்ற நிலைக்கு மகனால் தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய ரோவன் தன தாய் ஜோனாதனின் தலையில் கத்தியால் சுமார் 38 முறை தாக்கியும், 64 முறை கழுத்தில் தாக்கியும், கைகளில் 16 முறையும் தாக்கியுள்ளார். பின்னர் காவல்துறையினரை அழைத்து தாயாரை கொன்றதால் பிணப்பையை எடுத்து வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தனது தாயை கொலை செய்த கொலைகாரனை போல ரோவன் நடந்து கொள்ளாமல், தனது செல்லப் பிராணியான பூனையை குறித்து கவலைப்பட்டதாகவே போலீசார் கூறியுள்ளார். இந்நிலையில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் காரணமாக ரோவன் உளவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தத நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.