இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதன் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் விலை அதிகரித்தாலும் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் சிமெண்ட் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் சிமெண்ட் விலையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை 16 ரூபாய் வரை ஒரு மூட்டைக்கு அதிகரித்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை அதிகரிக்கலாம். இந்த விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விலை உயர்வு காரணமாக சிமெண்ட் நிறுவனங்களுக்கு ஒரு டன்னுக்கு 200 ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.